இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு: ராஜ்நாத் சிங்!

இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் நீடிப்பதாகவும், அதை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்! 

Last Updated : Sep 29, 2019, 01:01 PM IST
இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்பு: ராஜ்நாத் சிங்! title=

இந்திய கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் நீடிப்பதாகவும், அதை எதிர்கொள்ள கடற்படை தயார் நிலையில் உள்ளது என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்! 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், INS விக்ரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர்க் கப்பலில் மேற்கு கடற்படைப் பிரிவு வீரர்களுடன் பயணித்து வருகிறார். நேற்றிரவு முழுவதும் அந்தக் கப்பலில் தங்கி இருந்த ராஜ்நாத் சிங், வீரர்களின் பயிற்சியை பார்வையிட்டார். இன்று அதிகாலை வீரர்களுடன் சேர்ந்து அவர் யோகா செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாவை இந்தியா மட்டும் அல்லாது, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினார். யோகாவுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்றுக் கொடுத்த புகழ், பிரதமர் மோடியையே சாரும் என்றும் அவர் தெரிவித்தார். அப்போது கடல் வழி தீவிரவாத தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராஜ்நாத் சிங், உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கான பாதுகாப்பைப் பெற்றிருக்கும் என்ற போதிலும், தீவிரவாத தாக்குதலுக்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை மறுக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டில் நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலை யாரும் மறந்திருக்க முடியாது எனவும் அவர் கூறினார். ஒரு முறை தவறு நிகழ்ந்து விட்டதால், கண்டிப்பாக மீண்டும் அந்த தவறு நடக்கக் கூடாது என்று கூறிய ராஜ்நாத் சிங், கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல் நீடிப்பதாகவும், இந்தியாவை சீர்குலைக்க, தீவிரவாதத்தை ஒரு கருவியாக பாகிஸ்தான் பயன்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார். ஆனால், கடற்படையும், கடலோர காவல் படையும் எச்சரிக்கையுடனுடம், உறுதியுடனும் இருப்பதாகக் குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.  

 

Trending News