புதுச்சேரி: இந்நாள் முதல்வர் மீது முன்னாள் முதல்வர் சரமாரி குற்றச்சாட்டு..!

ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 11:28 AM IST
புதுச்சேரி: இந்நாள் முதல்வர் மீது முன்னாள் முதல்வர் சரமாரி குற்றச்சாட்டு..! title=

புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், புத்தாண்டு கொண்டாட்டத்தில் புதுச்சேரி அரசும், சுகாதாரத்துறையும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டினார். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், ஒமிக்ரான் வைரஸ் தொற்று புதுச்சேரியில் இரண்டு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

ALSO READ | Awareness: மதுவை ஒழிக்க பால் கொடுக்கும் நபர்...!

இது மேலும் அதிகரிக்கும் நிலை இருக்கும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், மாநிலத்தில் தொற்று அதிகரித்தால் முதலமைச்சர் ரங்கசாமி இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாராயணசாமி வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய அவர், பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால் மாநில அந்தஸ்து பெறுவோம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை, அதற்காக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறினார். மக்களை ஏமாற்றி பாஜகவும், முதலமைச்சர் ரங்கசாமியும் புதுச்சேரியில் ஆட்சியை பிடித்திருப்பதாக குற்றம்சாட்டிய அவர், ரங்கசாமி ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

ALSO READ | PM ex-gratia: வைஷ்ணோதேவி ஆலய கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தொகை அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News