மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா-வின் உத்தர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி என்- 200-ல் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது!
மேலும் இந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு வரும் மே 22-ஆம் நாள் காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Election Commission: Poll held on 19th May at polling station number 200 of the Kolkata Uttar parliamentary constituency declared void. Re-poll to be held on 22nd May from 7am to 6pm. #WestBengal pic.twitter.com/GbEyswN73z
— ANI (@ANI) May 21, 2019
முன்னதாக பஞ்சாப் மாநிலம் அமிர்தஸர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடி எண்: 123-ல் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என நேற்றைய தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. குறிப்பிட்ட இந்த வாக்குசாவடியில் மறு வாக்குப்பதிவு ஆனது வரும் மே 22-ஆம் நாள் காலை 7 மணி துவங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது.
குறிப்பிட்ட இவ்விறு வாக்குச்சவாடிகளிலும் வேட்பாளர்கள் மீண்டும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் பணிக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகள் முடக்கிவிட பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் குறிப்பிட்ட வாக்குசாவடியில் வாக்களிக்கவிருக்கும் வாக்காளர்களுக்கு அம்மாநில அரசுகள் ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளது.
முன்னதாக மேற்கு வங்க மாநிலம் பாத்பரா தொகுதியில் தேர்தல் விதி மீறல்கள் நடைப்பெற்றதாக கூறி நடைப்பெற்ற கலவரத்தினை அடுத்து இப்பகுதில் காலவரையற்ற 144 தடை உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பிட்ட இத்தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடைபெறுமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.