முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

Last Updated : Aug 24, 2019, 01:58 PM IST
முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்.. title=

பாஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

உடல்நல குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி (66) கடந்த 9ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில், இருதயம் மற்றும் நுரையீரல் சரியாக செயல்படாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து இதயம் முறையாக இயங்குவதற்கு மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் வழக்கத்தைவிட கூடுதலான செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. 

இந்நிலையில், இன்று அருண் ஜெட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிற்பகல் 12.07 மணியளவில் ஜெட்லி உயிரிழந்துவிட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

உயர்ந்த அறிவார்ந்த மற்றும் சட்ட வெளிச்சம் அருண் ஜெட்லி ஜி. அவர் இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கிய ஒரு வெளிப்படையான தலைவராக இருந்தார். அவர் காலமானது மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது மனைவி சங்கீ ஜி மற்றும் மகன் ரோஹன் ஆகியோரிடம் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.

அருண் ஜெட்லியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது; அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான குடும்ப உறுப்பினரையும் இழந்துவிட்டேன் என கூறியுள்ளார். மேலும் அவர் எப்போதும் தனக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஒரு நீண்ட நோயை துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் போராடிய பின்னர் ஸ்ரீ அருண் ஜெட்லி காலமானதால் மிகுந்த வருத்தம். ஒரு சிறந்த வழக்கறிஞர், ஒரு அனுபவமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு புகழ்பெற்ற அமைச்சர், அவர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியவர் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அவரது இழப்பு நமது நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அருண் ஜெட்லி கட்சி சார்ந்து இல்லாமல் நியாயத்தின் பக்கம் பேசுபவர் என்றும் அவரது மறைவு வருத்தமளிப்பதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். 

மேலும், அருண் ஜெட்லி மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக முதலமைச்சர் பழனிசாமி, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

Trending News