இந்தியாவின் தன்னிகரற்ற தலைவன் போக்ரான் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்..!!!

இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் இன்று. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 25, 2020, 01:49 PM IST
  • அடல் பிஹாரி வாஜ்பாய் போட்ட விதை பெரிய விருட்சமாக வளர்ந்து செல்வாக்குடன், இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக பாஜக திகழ்கிறது.
  • வாஜ்பாய் ஆட்சியின் முதல் சாதனையாக மே 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணு சோதனை கருதப்படுகிறது.
  • காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சித்தார்.
இந்தியாவின் தன்னிகரற்ற தலைவன் போக்ரான் நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய்..!!! title=

இந்தியாவின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாள் இன்று. 
இந்திய அரசியலில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராகத் திகழ்பவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்.

1939 ஆம் ஆண்டு முதல் ஆர் எஸ் எஸ் உறுப்பினராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 23 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார். 

தனது அரசியல் வாழ்க்கையில் பெரும் உயரங்களை அடைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய் (Atal Bihari Vajpayee) 1980-ம் ஆண்டு ஆர்எஸ்எஸ்ஸின் இந்துத்துவ தேசியவாதத்தை, அரசியல் தளத்தில் கொண்டு செல்லும் புதிய அரசியல் கட்சியாக பாரதீய ஜனதா கட்சியை (BJP) தொடக்கி, அதன் முதல் தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றார். அதன் பிறகு தேர்தலை சந்தித்த அக்கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், அன்று அவர் போட்ட விதை, இன்று மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்து செல்வாக்குடன், இந்தியாவின் மிகப்பெரிய கட்சியாக திகழ்கிறது. 

ALSO READ | West Bengal Election 2021: மம்தாவை வீழ்த்த பிஜேபி தயாரித்துள்ள மாஸ்டர் ப்ளான்..!!

 

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் (Congress) ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் அல்லாத கட்சியை சேர்ந்த பிரதமராக, 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்தவர் பிரதமர் வாஜ்பாய். 1996 ஆம் ஆண்டும் முதல் முறையாக பிரதமராக பதயேற்றார். பின்னர் 1998 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக பதவி ஏற்றார். 

கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அடல் பிஜாரி வாஜ்பாய்க்குக் (Atal Bihari Vajpayee) மக்கள் மத்தியில் ஆதரவு பெறுகியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பாஜக மட்டுமே 183 இடங்களில் வென்றது. அப்போது திரு.வாஜ்பாய் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

அவர் பொற்கால ஆட்சியை வழங்கினார். வாஜ்பாய் ஆட்சியின் முதல் சாதனையாக மே 1998-இல் இந்தியா நடத்திய பொக்ரான் அணு சோதனை கருதப்படுகிறது. வாஜ்பாய் அரசின் மற்றொரு சாதனை தங்கநாற்கரச் சாலைத் திட்டம். இது இந்தியாவின் நான்கு முக்கியப் பெருநகரங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும்.
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்கும் நோக்கில் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக டெல்லி-லாகூருக்கு இடையே 1999-இல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்கினார். 

ஆனால், பாகிஸ்தான் (Pakistan)  முதுகில் குத்தியது. கார்கிலில் ஊடுருவி, பிரச்சனை ஏற்படுத்தியதை அடுத்து கார்கில் போர் மூண்டது. ஆனால், இந்தியா எடுத்த  ஆபரேஷன் விஜய் நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் ஓட ஓட விரட்டப்பட்டது.

அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு  நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டது.

வாஜ்பாய் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு இயற்கையின் மீது தனி விருப்பம் உண்டு. அவர் சிறந்த அரசியல் வாதி மட்டுமல்ல, சிறந்த கவிஞரும் கூட. பல கவிதை நூல்களையும் சுயசரிதையையும் எழுதினார். வாஜ்பாய் கவிதைகள் என்ற தலைப்பில் தமிழிலும் அவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. இசையிலும் நடனத்திலும் கூட ஆர்வம் அதிகம் கொண்டவர். பள்ளிப்பருவத்திலிருந்து இலக்கிய ஈடுபாடு கொண்டதால் தனது எழுத்திம் மூலம் பல முத்திரைகளை பதித்துள்ளார். 

ALSO READ | தாகூரின் சிந்தனையில் இருந்து உதித்தது தான் தற்சார்பு இந்தியா: பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News