தகனம் செய்யப்பட்ட தொழிலாளி உயிரோடு திரும்பினார்: Police கொடுமை அம்பலம்!!

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட தொழிலாளி, ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள கார்படா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார். ஆனால், வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 10, 2020, 06:11 PM IST
  • ஒரு தொழிலாளியை கொலை செய்ததாக அவரது இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
  • கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட அந்த தொழிலாளி, அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.
  • COVID-19 தொற்று காரணமாக அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததால் தான் ஜுனாகரில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார்.
தகனம் செய்யப்பட்ட தொழிலாளி உயிரோடு திரும்பினார்: Police கொடுமை அம்பலம்!! title=

அகமதாபாத்: குஜராத் (Gujarat) காவல்துறையினரால் நடத்தப்பட்ட விசாரணையில், ஒரு தொழிலாளியை கொலை செய்ததாக அவரது இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட அந்த தொழிலாளி, ஆரவல்லி மாவட்டத்தில் (Aravalli District) உள்ள கார்படா கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி வந்தார்.

ஆனால், வீடு திரும்பியதும் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் இறந்து விட்டதாக எண்ணப்பட்டதாகவும், பிப்ரவரி மாதமே தகனம் செய்யப்பட்டதாகவும் அவர் அறிந்து கொண்டார்.

இந்த சம்பவம் இஸ்ரி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்டது. ஈஸ்வர் மனத் என்ற அந்த தொழிலாளி, வீடு திரும்பிய பின்னர், காந்திநகர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சூடாசாமா இன்ஸ்பெக்டர் ஆர்.ஆர்.தபியாத்தை இடைநீக்கம் செய்தார். விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் மாவட்டத்தின் மோதி மோரி கிராமத்தில் ஒரு மனிதனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் உள்ளூர் மக்களிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில், இது மனத்தின் உடல் என்று போலீசார் முடிவு செய்தனர். உடலின் காலில் ஒரு இரும்புக் கம்பியும் இருந்தது, மனத்துக்கும் இதேபோன்ற ஒரு கம்பி இருந்தது.

ALSO READ: அட…வீட்ட சுத்தம் செஞ்சப்ப Tea-Pot வடிவத்துல அடிச்ச 95 லட்சம் Jackpot!!

அதன்பிறகு, விசாரணை அதிகாரிகள் மனத்தின் இரண்டு சகோதரர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, ​​அவரைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவர்கள் துணை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை அதிகாரிகள் (Investigating Officials) சித்திரவதை செய்ததாகவும், தனது சகோதரர்களை கட்டாயப்படுத்தி அவர்கள் செய்யாத குற்றத்தை ஒப்புக் கொள்ளும்படி செய்ததாகவும் மனத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், COVID-19 தொற்று காரணமாக அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததால் தான் ஜுனாகரில் சிக்கிக்கொண்டதாக அவர் கூறினார். மனத் உயிரோடிருக்கும் பட்சத்தில் பிப்ரவரி மாதம் தகனம் செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பதை கண்டறிய வேண்டியிருகக்கும். ஆகையால் மனத் மீண்டும் திரும்பி வந்தது போலீஸ் அதிகாரிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில், உ.பி.யின் அம்ரோஹா (Amroha) மாவட்டத்தில் 20 வயது மகளை கொலை செய்ததாக ஒரு நபரும் அவரது இரண்டு மகன்களும் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர். ஏறக்குறைய 18 மாதங்களுக்குப் பிறகு, அப்பெண் தனது காதலனுடன் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ALSO READ: இப்படி பாத்துட்டே இருந்த எப்டி?... சாப்பிட எதாவது போடுங்க... கரடியின் கியூட் வீடியோ!!

Trending News