நாட்டை உலுக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில், முக்கிய குற்றவாளியான நிரவ் மோடியை (Nirav Modi), விசாரணைக்காக நாடு திருப்பி அழைத்து வர தொடர்ந்து இந்தியா முயற்சி செய்து வரும் நிலையில், இன்று, முக்கிய நடவடிக்கையாக, நிரவ் மோடியை நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
₹13,500 கோடி மோசடி செய்த, குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி, 2018-ம் ஆண்டில் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். லாவோசில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கு, சென்ற நிரவ் மோடி (Nirav Modi), அங்கிருந்து இந்தியா திரும்பிவில்லை. கடந்த மார்ச் மாதம் லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடியை லண்டன் போலீசார் கைது செய்தனர்.
அவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசு, இந்தியாவில் உள்ள அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் சோதனை நடத்தியதுடன், அவரது சொத்துக்கள் மற்றும் ஆவணங்கள், அமலாக்கதுறை மற்றும் மத்திய புலானாய்வு கழகம் சிபிஐ பறிமுதல் செய்தது.
முன்னதாக, இந்த ஆண்டு பிப்ரவரி, 25 ஆம் தேதி, நீரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணைக்காக இந்தியாவுக்கு நாடு திருப்பி அனுப்ப உத்தரவிட, நீரவ் மோடிக்கு எதிரான தேவையான முதன்மை ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் உள்ளதாக கூறிய பிரிட்டன் நீதிமன்றம் அந்த தீர்ப்பை வழங்கியது.
மனித உரிமை மீறல்கள் ஏதும் இன்றி நியாயமான விசாரணை நடைபெறும் என இந்திய அரசு உறுதி கூறியதை ஏற்றுக் கொண்ட பிரிட்டன் நீதிமன்றம், மனித உரிமை மீறல்கள் அல்லது சிறையில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து, எதிர் தரப்பு எழுப்பிய விஷயங்களை நிராகரித்தது,
ALSO READ | நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம்: பிரிட்டன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
இருப்பினும், இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு உரிமை உண்டு என்று நீதிமன்றம் கூறியது. எனினும், மாநில செயலாளர் முடிவு எடுக்கும் வரை இந்த முறையீடு தொடர்பான விசாரணை நடத்தப்படாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) மோசடியில் தொடர்புடைய அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். அவரையும் விசாரணைக்காக இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ALSO READ | இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு அநீதி இழைத்த 3 கேரள போலீஸார் மீது CBI வழக்கு: SC
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR