இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேலை வரவேற்ற மோடி!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

Last Updated : Mar 10, 2018, 08:03 AM IST
இந்தியா வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேலை வரவேற்ற மோடி! title=

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

உலக தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் இமானுவேல் மேக்ரன். கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸின் அதிபராக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு அவர் இன்று இந்தியா வந்துள்ளார். தனது மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் உடன் டெல்லி விமான நிலையம் வந்த மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார். 

இந்த சந்திப்பில் போது இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், மேக்ரனை இந்தியாவுக்கு வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டரில் ஏற்கனவே பதிவிட்டுள்ளதாவது, "இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களது வருகை இருநாடுகள் இடையிலான நட்புக்கு கூடுதல் வலுசேர்க்கும். நாளை நம் இருவர் இடையேயான பேச்சுவார்த்தையை எதிர்ப்பார்க்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து, தனது மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் உடன் டெல்லி விமான நிலையம் வந்த மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றுள்ளார்.

சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் இந்தியா வந்த போது, அவரை மோடி நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையான நிலையில், தற்போது மேக்ரனை நேரில் சென்று வரவேற்றுள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

அதை தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

Trending News