#MannKiBaat: பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி!

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பாரதம் என்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா பார்த்ததை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்'' என பிரதமர் மோடி அழைப்பு!

Last Updated : Aug 25, 2019, 01:14 PM IST
#MannKiBaat: பிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்: பிரதமர் மோடி! title=

திறந்த வெளி கழிப்பிடங்கள் இல்லாத பாரதம் என்பது மட்டுமின்றி பிளாஸ்டிக் இல்லா பார்த்ததை உருவாக்க உறுதிமொழி ஏற்போம்'' என பிரதமர் மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின் 47-வது மாதமாக இன்று நடைபெற்ற
மன் கீ பாத் நிகழ்ச்சில், ரேடியோ வழியாக மக்கள் மத்தியில், உரையாற்றிய பிரதமர் மோடி பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

பிரதமர் மோடி மன் கீ பாத்-ல் பேசியதாவது...! 

பெரிய திருவிழாவிற்கு இந்தியா தயாராகி வருகிறது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. உலகமே உன்னிப்பாக கவனிக்கும் இந்த நாளில், இந்த ஆண்டு திறந்த வழி கழிப்பிடங்கள் இல்லாத இந்தியாவை உறுதி செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அத்துடன் பிளாஸ்டிக் இல்லாத பாரதத்தை உருவாக்க, இந்த ஆண்டு முதல் உறுதி மொழி ஏற்போம். அதன்படி செயல்படுவோம். நம் தாய்நாட்டை பிளாஸ்டிக் மாசிலிருந்து காப்போம். 

வனப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், நான் ஹிந்தி பேசியதை, பியர் கிரில்ஸ் எப்படி புரிந்து கொண்டார் என ஏராளமானார் கேள்வி எழுப்புகின்றனர். சிலர் இந்த நிகழ்ச்சி எடிட் செய்யப்பட்டதா அல்லது பல முறை காட்சிபடுத்தப்பட்டதா எனவும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கும், அவருக்கும் இடையில், தொழில்நுட்பம் பெரிய பாலமாக செயல்பட்டது. எனது ஹிந்தி மொழியை மொழிபெயர்க்கும் கருவியை அவர் அணிந்து கொண்டார்.

பருவ நிலை மாற்றத்திற்கு எதிராகவும், இந்தியாவில் தூய்மையான சுற்றச்சூழலுக்காகவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர் ஆக.,29 தேசிய விளையாட்டு தினத்தன்று, பிட் இந்தியா இயக்கத்தை நாம் துவக்குவோம். அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை பார்க்க விரும்புகிறேன்.

கடவுள் கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து, அனைவரும், தற்போதைய பிரச்னைகளுக்கான தீர்வை காண வேண்டும். கடவுள் கிருஷ்ணர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தாலும், பிரச்னைகளுக்கு அவர் வழங்கிய தீரவுகள், இன்றும் பொருத்தமாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

 

Trending News