புதுடெல்லி: வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்பொழுது, தற்போது இந்தியா மிக வேகமாக மாறி வருகிறது. அது மக்களின் நலனுக்காக நடக்கிறது என்று கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறியது,
புதிய இந்தியாவில் ஊழலுக்கு இடமில்லை. புதிய இந்தியா பொறுப்புள்ள அரசு மற்றும் பொறுப்புள்ள குடிமக்களின் சகாப்தம் என்று அவர் கூறினார். புதிய இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தனி நபரின் குரல் ஒலிப்பதில்லை. ஆனால் அனைத்து இந்தியர்களின் குரலாக ஒன்றாக ஒலிக்கிறது. இந்தியாவை ஊழலிலிருந்து விடுவிப்போம். நல்லாட்சியை ஒரு வெகுஜன இயக்கமாக மாற்றுவோம். வலுவான விருப்பத்தினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளன.
தூய்மையான இந்தியாவை நாங்கள் தொடர்ந்து கட்டுவோம் என்று இன்று மக்களளே கூறுகிறார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இது ஒரு புதிய இந்தியா. இதில் இளைஞர்கள் தங்கள் பெயருக்கு துணை பெயரை (Surnames) தேடுவது ஒரு பொருட்டல்ல, அவர்கள் எவ்வாறு தங்கள் பெயரை உருவாக்குகிறார்கள் என்பது தான் மிக முக்கியம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.