அயோத்தி தீப உற்சவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி; ராம ஜென்மபூமியில் பிரார்த்தனை!

பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 23, 2022, 07:50 PM IST
  • அயோத்தி நகரம் முழுவதும் 18 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கவுள்ளது.
  • அயோத்தி தீப உற்சவ விழாவில் பங்கேற்பதற்காக சென்றடைந்தார்.
  • பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர்.
அயோத்தி தீப உற்சவ விழாவில் பிரதமர் நரேந்திர மோடி; ராம ஜென்மபூமியில் பிரார்த்தனை! title=

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 23, 2022 அன்று அயோத்தி தீப உற்சவ விழாவில் பங்கேற்பதற்காக சென்றடைந்தார். பிரதமர் மோடியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உ.பி கவர்னர் ஆனந்திபென் படேல் ஆகியோர் வரவேற்றனர். அயோத்தியை அடைந்த பிரதமர் மோடி, ராம ஜென்மபூமியில் ராம் லல்லா என்னும் குழந்தை ராமரை பிரார்த்தனை செய்தார். ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா இடத்தையும் அவர் ஆய்வு செய்தார். 

இன்று, அயோத்தி நகரம் முழுவதும் 18 லட்சம் தீபங்களை ஏற்றி புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கவுள்ளது. இந்த தீபத்ஸவம் குறித்து தெரிவித்த சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் ஜெய்வீர் சிங், "திரேதாயுகத்தில் ராமர் இலங்கையை வென்று அயோத்திக்கு திரும்பியதும், அயோத்தி மக்கள் அவரை எப்படி வரவேற்றார்கள் என்பதையும், அயோத்தியில் இன்று எப்படி இந்த காலாச்சாரம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையும் தீப உற்சவ கொண்டாட்டங்கள் நினைவூட்டும்" என்று கூறினார்.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 'ராம் நகரி'யில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டங்களில் பட்டாசுகள், லேசர் காட்சி மற்றும் ராம்லீலா நிகழ்ச்சிகள் இடம்பெறும். பிரதமர் மோடி 3-டி ஹாலோகிராபிக் ப்ரொஜெக்ஷனையும் கண்டு களிப்பார். சரயூ நதிக்கரையில் கண்கவர் மெல்லிசை லேசர் பிரொஜெக்‌ஷன் நடைபெறும்.

மேலும் படிக்க | சிக்கபல்லாபூர் ஈஷா மையத்தில் நாக மண்டபம்: திறந்துவைத்தார் கர்நாடக முதல்வர்

ஆன்மீக முக்கியத்துவத்தை மட்டுமல்லாமல் `தோபியா` மற்றும் `ஃபாருவாஹி` நடனக் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். "அவத்தில் உள்ள `பிராஜ்` கலைஞர்கள் இந்த ஆன்மீக தேசத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் தனித்துவமான கலைகளால் பார்வையாளர்களை மயக்குவார்கள்," என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று கூறுகிறது.

மேலும் படிக்க | மண் வளத்தை பாதுகாக்க ஐநாவின் ஒலித்த சத்குருவின் குரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News