G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க  செல்கிறார்.  ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 25, 2022, 09:16 PM IST
  • இந்தியா திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் பயணம் மேற்கொள்கிறார்.
  • ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • 7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) பயணம் செல்கிறார்.
G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம் title=

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 26-27 தேதிகளில் ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மாவ் நகருக்கு ஜி7 உச்சி மாநாட்டிற்குச் செல்கிறார்.  மேலும் இந்தியா திரும்பும்  வழியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் பயணம் மேற்கொள்கிறார். ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி அந்த நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மனிதகுலத்தை பாதிக்கும் முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பிற ஜனநாயக நாடுகளையும் ஜி 7 உச்சிமாநாட்டில் பங்கேற்க ஜெர்மணி அழைப்பு விடுத்துள்ளது.

உச்சிமாநாட்டில், ​​சுற்றுச்சூழல், ஆற்றல், காலநிலை, உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், பயங்கரவாத எதிர்ப்பு, பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் போன்ற  பிரச்சினைகள் குறித்து G7 நாடுகள், G7 நாடுகளின் நட்பு நாடுகள் மற்றும்  சர்வதேச அமைப்புகளுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளதாக, தனது பயணத்தை பற்றி குறிப்பிடுகையில் பிரதமர் மோடுஇ தெரிவித்தார். 

மேலும் படிக்க | நான் கடத்தப்பட்டேன்! நான் உத்தவ் தாக்கரேவுடன் இருக்கிறேன்: கட்சிக்கு திரும்பிய சிவசேனா எம்எல்ஏ

உச்சிமாநாட்டின் போது, ​​சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட இரண்டு அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கியமான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அர்ஜென்டினா போன்ற பிற ஜனநாயகங்கள் , இந்தோனேசியா, செனகல் மற்றும் தென்னாப்பிரிக்காவும் அழைக்கப்பட்டுள்ளன என  MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

G7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE)  ஜூன் 28, 2022 அன்று பயணம் செய்கிறார், முன்னாள் ஐக்கிய அரபு அமீரக அதிபரும் அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்கு தனிப்பட்ட இரங்கல் தெரிவிக்கிறார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபராகவும், அபுதாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை வாழ்த்துவதற்கு பிரதமர் மோடி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வார் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: என்ன நடந்தாலும்.. உத்தவ் தாக்கரேவுக்கு முழு ஆதரவு உள்ளது: என்சிபி தலைவர் அஜித் பவார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News