மாலத்தீவு, இலங்கை செல்லும் முன் குருவாயூர் கோவிலில் மோடி சாமி தரிசனம்!

மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு செல்லும் முன் கேரள கோவிலில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி கேரளா வருகை!!

Last Updated : Jun 8, 2019, 10:40 AM IST
மாலத்தீவு, இலங்கை செல்லும் முன் குருவாயூர் கோவிலில் மோடி சாமி தரிசனம்! title=

மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு செல்லும் முன் கேரள கோவிலில் பிரார்த்தனை செய்ய பிரதமர் மோடி கேரளா வருகை!!

பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுன் 8) மாலத்தீவு செல்கிறார். அங்கிருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்று, அதிபர் சிறிசேனாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.  காலை 11 மணியில் இருந்து 12 மணிவரை, இலங்கை அதிபரின் செயலகம் செல்லும் சாலைகள் அனைத்தும் மூடப்படும் என்றும், வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் செல்பவர்கள், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முன்னதாகவே பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், பிரதமர் மோடி, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோயிலில் இன்று வழிபாடு செய்கிறார். இதற்காக அவர் இன்று காலை கொச்சி வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மூத்தத் தலைவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து, கொச்சியில் இருந்து திருச்சூரில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிறப்பு வழிபாடு நடத்துகிறார். அவர் எடைக்கு எடை தாமரைப் பூக்களை துலாபாரம் கொடுக்கிறார். இதற்காக 112 கிலோ தாமரைப் பூக்கள் அங்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதை முடித்த பின்னர் கேரளாவில் பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் உரை யாற்றுவார் என கூறப்படுகிறது.

குருவாயூர் கோயிலில் வழிபாட்டை முடித்த பின்னர், குருவாயூர் ஸ்ரீகிருஷ்ண மைதானத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கவுள்ளதாக கேரள மாநில பாஜக தலைமை சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரதமர் மோடி, மாலத்தீவு மற்றும் இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார். 

 

Trending News