பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த தினமான, டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை அன்று, முன்னாள் பிரதமர் நரேந்திர மோடி, நாளை சுமார் 9 கோடி விவசாயிகளுடன் உரையாட உள்ளார். அப்போது, பிரதமரின் விவசாயிகள் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் ₹2000 வழங்கப்படும். விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக தலா ₹2000 என மொத்தம் ₹18,000 கோடி செலுத்தப்படும்.
இந்த திட்டத்தை பிரதமர் மோடி (PM Narendra Modi) , 2019 ஆம் ஆண்டு துவக்கி வைத்தார். நாட்டில் விளைநிலம் வைத்துள்ள அனைத்து விவசாயக் குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது, 2 ஹெக்டேர் அளவிற்கு நிலம் வைத்திருப்பவர்களுக்கு இந்த விவசாயிகள் சம்மான் நிதி உதவி வழங்கப்பட்டது. பின்னர், இந்த திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து விசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதில் நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகளும் இந்த உரையாடலில் பங்கு கொள்ளும் வண்ணம் பாஜக (BJP) விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து மண்டிகளிலும், பிரதமர் உரை தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக நிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளான் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்த உரையாடல் முக்கியத்துவம் பெறுகிறது.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) நான்கு வாரங்களாக நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் போராட்டக் குழுக்களை மற்றொரு சுற்று கூட்டத்திற்கு அழைத்துள்ளார். முன்னர் நடந்த பல சுற்று பேச்சுக்களில் எந்தவிதமான குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.
ALSO READ | தாகூரின் சிந்தனையில் இருந்து உதித்தது தான் தற்சார்பு இந்தியா: பிரதமர் மோடி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR