பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார்

Heeraben Modi passed away : பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரான ஹீராபென் மோடி, உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100.

Written by - Sudharsan G | Last Updated : Dec 30, 2022, 07:37 AM IST
  • நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதி.
  • பிரதமர் மோடி நேரில் வந்து உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
  • தாயாரின் மறைவை ஒட்டி பிரதமர் உருக்கமான ட்வீட்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி காலமானார் title=

Heeraben Modi passed away : பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3.39 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அவரது மறைவை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் மோடி, இன்று அதிகாலை உருக்கமான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள். மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | மறைந்தார் கால்பந்து ஜாம்பவான் பீலே

மேலும், இந்த ஆண்டு தனது தாயாரின் 100ஆவது பிறந்தநாளையொட்டி அவரைச் சந்தித்ததை பிரதமர் மோடி நினைவுக்கூர்ந்தார். "அவருடைய 100ஆவது பிறந்தநாளில் நான் அவரை சந்தித்தபோது, அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது எப்போதும் நினைவில் இருக்கிறது. புத்திசாலித்தனத்துடன் வேலை செய்யுங்கள், தூய்மையுடன் வாழுங்கள்" என்று பிரதமர் மோடி ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் தாயார் ஹீராபென் மோடி அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் நேற்று முன்தினம் (டிச. 28) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மருத்துவமனை தரப்பிலும், குஜராத் அரசு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடியும் அவரது தாயாரை மருத்துவமனையில் வந்து சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தது குறிப்பிடத்தக்கது. 

தாயார் ஹீராபென் மோடி, பிரதமர் மோடியின் தம்பி பங்கஜ் மோடியுடன் காந்திநகர் அருகே உள்ள ரேசான் கிராமத்தில் வசித்து வந்தார். பிரதமர் தனது பெரும்பாலான குஜராத் பயணங்களின் போது ரேசான் கிராமத்திற்கு சென்று தாயாரை அடிக்கடி சந்தித்து அவருடன் நேரத்தை செலவிடுவார்.

தற்போது, தாயார் மறைவையொட்டி பிரதமர் மோடி உடனடியாக டெல்லியில் இருந்து அகமாதாபாத் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முன்னதாக, மேற்கு வங்கத்தில் ஹவுரா - கொல்கத்தா நகரங்களுக்கு இடையேயான வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து தொடக்கிவைத்து, நமாமி கங்கேயின் கீழ் ரயில்வேயின் மற்ற மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, அவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மருத்துவமனையில் அனுமதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News