விவசாயிகளை ஓட்டு வங்கிகளாய் கருதும் காங்கிரஸ்: மோடி தாக்கு

விவசாயிகள் கடன் வாங்கும் நெருக்கடியை உருவாக்கியது காங்கிரஸ் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ளார்....

Last Updated : Jan 5, 2019, 04:27 PM IST
விவசாயிகளை ஓட்டு வங்கிகளாய் கருதும் காங்கிரஸ்: மோடி தாக்கு title=

விவசாயிகள் கடன் வாங்கும் நெருக்கடியை உருவாக்கியது காங்கிரஸ் என பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கியுள்ளார்....

விவசாயிகளை தங்கள் ஆட்சிக் காலத்தில் கடன்வாங்கும் நிலைக்குத் தள்ளிய காங்கிரஸ் கட்சி, தற்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பெயரில் மீண்டும் ஏமாற்றுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெறும் வகையில் மண்டல் அணைத் திட்டத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, ஜார்க்கண்ட் மாநிலம் பாலாமு (Palamu) மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபர்தாஸ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இந்த திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நிறைவேற்றியிருந்தால், விவசாயிகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் விவசாயிகளை ஏமாற்றியது. வாக்குவங்கி அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தியது. தேர்தல் நேரத்தில் தான் அவர்கள் குறித்த நினைவு காங்கிரசுக்கு வரும். அக்கட்சி கொள்கைகளால் தான் விவசாயிகளுக்கு கடன் ஏற்பட்டுள்ளது. BJP, தான் விவசாயிகளின் வளர்ச்சிக்கு உழைக்கிறது. BJP விவசாயிகளுக்காக உழைக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் உழைக்கும். 

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது உயர்ந்த வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், எதனையும் நிறைவேற்றவில்லை. அக்கட்சி ஆட்சியில் திட்டங்களை பல ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதனை BJP, ஆட்சிக்கு வந்து செயல்படுத்தியது. எங்களின் வளர்ச்சி பணிகளை கேள்வி கேட்க காங்கிரசுக்கு தகுதியில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 25 ஆயிரம் பேருக்கு இலவச வீடுகளை வழங்கியுள்ளோம். அடிப்படை வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். 2022-க்குள் அனைவருக்கும் என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம்.

இடைத்தரகர்களுக்காக காங்கிரஸ் செயல்பட்டது. BJP ஆட்சியில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை. மத்திய அரசு வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. பெண்கள் அதிகாரம் பெறவும் அரசு செயல்பட்டு வருகிறது. மன்மோகன் அரசை, சோனியா ரிமோட் கன்ட்ரோல் மூலம் கட்டுப்படுத்தினார் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News