உலகின் மிகப் பெரிய ‛பகவத் கீதை’ புத்தகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

உலகிலேயே மிகப் பெரிய பிரம்மாண்டமான பகவத் கீதை புத்தகத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

Last Updated : Feb 26, 2019, 06:00 PM IST
உலகின் மிகப் பெரிய ‛பகவத் கீதை’ புத்தகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்! title=

உலகிலேயே மிகப் பெரிய பிரம்மாண்டமான பகவத் கீதை புத்தகத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

உலகம் முழுவதும் கிருஷ்ண பக்தி மார்கத்தையும், பகவத் கீதை சாராம்சத்தையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியை, இஸ்கான் அமைப்பு செய்து வருகிறது. அந்த வகையில் உலகின் மிகப் பெரிய பகவத் கீதை புத்தகத்தை தயாரிக்கம் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டது. அதன் படி, 800 கிலோ கிராம் எடையில், இந்த புத்தகம் தயாராகியுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பகவத் கீதை என்ற பெருமையை, டெல்லி இஸ்கான் கோவிலில் உள்ள புத்தகம் பெற்றுள்ளது. அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் என்பதன் ஆங்கில வார்த்தையின் சுருக்கமே “இஸ்கான்” ஆகும். இதனை ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அழைப்பர். 

இந்நிலையில் இந்த புத்தகத்தை, டெல்லியில் உள்ள இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் கிருஷ்ணன் கோவிலில், பிரதமர் நரேந்திர மாேடி வெளியிட்டார். 

 

 

Trending News