370வது பிரிவு நீக்கிய பிறகு முதல் முறையாக அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு மாற்றப்பட்ட பின்னர் முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2019, 09:02 PM IST
370வது பிரிவு நீக்கிய பிறகு முதல் முறையாக அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு title=

புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கிய பின்னர் முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இரு தலைவர்களிடையே சுமார் 30 நிமிடங்கள் உரையாடல் நடந்ததாகக் கூறப்படுகிறது. பயங்கரவாதம் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து பிரதமர் மோடி டிரம்புடன் பேசினார் எனக் கூறப்படுகிறது. 

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுடன் பேசுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடனான கடந்த வெள்ளிக்கிழமை உரையாடலின் போது, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுடனான பதட்டத்தை குறைக்க பாகிஸ்தான் விரும்பினால், இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியிருந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் உலகின் வேறு எந்த நாட்டின் ஆதரவும் கிடைக்கவில்லை. ரஷ்யா உள்ளிட்ட பிற நாடுகள் இந்தியாவை ஆதரித்தன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவை தனக்கு ஆதரவாக அழைக்க முயன்றார், ஆனால் அமெரிக்கா காஷ்மீர் விவகாரம் குறித்து இருநாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறினார்.

இந்தநிலையில், இன்று  ஜம்மு-காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் பேசியுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் நடந்ததாகக் கூறப்படும், இந்த உரையாடலில் இரு தலைவர்களும் பயங்கரவாதம் மற்றும் எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து பேசியதாகவும், இம்ரான் கானை பெயரைக் குறிப்பிடாமல் சில தலைவர்களின் அறிக்கைகள் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பயங்கரவாதத்தை எல்லையைத் தாண்டி நிறுத்த வேண்டியது அவசியம் மற்றும் இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள், பிராந்திய பிரச்சினைகளை பற்றி இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

Trending News