உலக பொருளாதார மன்றத்தின் டாவோஸ் மாநாட்டில் வீடியோ கான்பரென்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். உலகெங்கிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முக்கிய தொழில்துறை தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), தனது உரையில், இந்தியா மிக சிறப்பாக கொரோனா சாவாலை கையாண்டது என்றும், வெறும் 12 நாட்களில் 23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்றார்.
முதலில் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்குகளை வெளிநாடுகளில் இருந்து வாங்கிய இந்தியா, இப்போது இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்றார்.
"நாங்கள் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தினோம்," என்று கூறிய பிரதமர் மோடி "கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அனைத்து சவால்களையும் வென்றது." என்றார்
150 நாடுகளுக்கு வைரஸ் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறிய அவர் கொரோனா வைரஸுக்கு (corona Virus) எதிரான இந்தியாவின் நடவடிக்கையை பிரதமர் பாராட்டினார். "தொற்றுநோயின் உச்சத்தில் ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற நாங்கள் முன்னுரிமை அளித்தோம்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ALSO READ | இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 2021 ஆம் ஆண்டில் 11.5 சதவிகிதமாக இருக்கும்: IMF
"அடுத்த சில மாதங்களில், சுமார் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான எங்கள் இலக்கை நாங்கள் அடைவோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.
"இப்போது இரண்டு மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் உள்ளன. எதிர்காலத்தில் இந்தியாவில் (India) இருந்து இன்னும் பல தடுப்பூசிகள் வரும் என்பதை அறிந்து உலக பொருளாதார மன்றம் நிம்மதி பெறும்." என அவர் கூறினார்
தற்போது இந்தியா பல நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி உதவி வருகிறது. இந்தியாவின் இந்த செயலை, பல நாடுகள் பாராட்டியுள்ளன. உல்க சுகாதார மையமும் இந்தியாவின் செயலை புகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற உலக பொருளாதார மன்ற மாநாட்டில், மனிதகுலத்தின் நன்மைக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல் என்பது குறித்து பிரதமர் உரையாற்றினார். பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளோடும் அவர் உரையாடினார்.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR