அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமையான இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் ஆல் இந்தியா ரேடியோ மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது,
ஒற்றுமைக்கான சின்னத்தை குறிக்கும் வகையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு, உலகின் மிகப்பெரிய சிலை அமைக்கப்பட்டும். இந்தச் சிலையை வரும் 31ம் தேதி திறந்து வைக்கப்படுகிறது. இதையொட்டி, அன்று நடக்கும் ஒற்றுமைக்கான ஓட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.
முதல் உலகப் போருக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை, ஆனால் அதில் இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டனர். இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
முதல் உலகப் போருக்கும் இந்தியாவுக்கும் தொடர்பில்லை, ஆனால் அதில் இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டனர். இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு தான் உலகம் அமைதியின் முக்கியத்துவத்தை உணர்ந்தது. இந்திய விமானப்படை இன்று உலகின் சக்திவாய்ந்த விமானப்படைகளின் ஒன்றாக திகழ்கிறது
சமூகத்தில் வசிக்கும் நாம் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தை மதிக்க வேண்டும். சமூக பணிகளில் மக்கள் ஆர்வமாக பங்கேற்பது பலருக்கும் முன்மாதிரி. இயற்கையை காப்பது நமது கடமை. இந்த விஷயத்தில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
என்று மோடி பேசினார்