ஜூலை 15-யில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன் -2 விண்கலம் நிலவின் தென் துருவத்தை ஆராயும் என இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று காலை தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சந்திராயன் 2 விண்கலம் திங்கள் அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
#ISROMissions #GSLVMkIII carrying #Chandrayaan2 spacecraft, undergoing launch checks at launch pad in Sriharikota. Launch is scheduled at 2:51AM IST on July 15.
Stay tuned for more updates... pic.twitter.com/n2RA14A3KX— ISRO (@isro) July 11, 2019
மேலும், இரண்டு மாதங்களுக்கு பின் நிலவின் தென்திசையில் சந்திரயான் 2 வின்கலம் லேண்டர் மூலம் பாதிப்பு ஏற்படாத வகையில் மெதுவாக இறங்கும் விதமான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது என்று தெரித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய சிவன் குறிப்பிட்ட நேரத்தில் சரியான திசையில் சந்திரயான் 2 நிலவில் இறங்கும் என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கான பணிகள் அனைத்தும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என்றும் கூறியுள்ளார்.
Dr K. Sivan, Chairman, Indian Space Research Organisation (ISRO): On 15 July at 2:51 am, we're going to launch the most prestigious mission Chandrayaan-2. GSLV MK-III being used for the mission.After successful launch, it'll take nearly 2 months to go&land on Moon near South Pole pic.twitter.com/Kz04ln6iLZ
— ANI (@ANI) July 13, 2019
மேலும், திங்கட்கிழமை அதிகாலை 2. 51 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மழை வந்தாலும் சந்திராயன்-2 விண்ணில் செலுத்துவதில் எந்தவித பாதிப்பும் இருக்காது. முற்றிலும் ரெயின் ப்ரூப் ( மழையால் பாதிக்காத வகையில் ) தொழில் நுட்பத்தில் சந்திரயான் 2 வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய சிவன் 1000 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் தயார் செய்யப்பட்டுள்ளது இந்த விண்கலம் என்று தெரிவித்தார்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப கூடிய ககன்யான் திட்டம் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது என்று கூறிய அவர் இதற்கான வடிவமைப்பு நிறைவு பெற்றுள்ளது என குறிப்பிட்டார்.