அதிர்ச்சி!! பெட்ரோல் பம்ப் ஊழியர்களை தாக்கும் ரவுடி கும்பல் : வீடியோ

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பம்ப் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jan 11, 2018, 11:12 AM IST
அதிர்ச்சி!! பெட்ரோல் பம்ப் ஊழியர்களை தாக்கும் ரவுடி கும்பல் : வீடியோ  title=

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற சம்பவத்தை பார்க்கும் போது ரவுடி கும்பலுக்கு காவல் துறையிடம் எந்தவித பயம் இல்லை என்பதைக் காட்டுகிறது. இச்சம்பவம் முர்லிபுரா என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. 

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள முர்லிபுரா பெட்ரோல் பம்ப் பணிபுரியும் விற்பனை மேலாளரை, அங்கு வந்த 15-20 ரவுடி கும்பலால் தாக்கப்பட்டார். பெட்ரோல் பம்ப் மேலாளர் காயம் அடைந்தார். இச்சம்பவம் பெட்ரோல் பம்ப் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதில், அங்கு வந்த 15-20 நபர்கள் கொண்ட ரவுடி கும்பல், பெட்ரோல் பம்ப் பணிபுரியும் ஊழியர்களையும், விற்பனையாளர்களுக்கும் திடீரென தாக்குகிறார்கள். இரும்பு பைப்புகளாலும், கம்புகளாலும் பெட்ரோல் பம்ப் ஊழியர்களை கொடூரமாக தாக்குகிறார்கள். இதைபார்த்து பெட்ரோல் போடா வந்தவர்கள் பயந்து பயந்து பயந்து ஓடுகிறார்கள்.

இச்சம்பவம் அடுத்து பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் முர்லிபுரா போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தனர். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முர்லிபுரா பெட்ரோல் பம்புக்கு அருகே வசிக்கும் பகுதியில் இருக்கும் ரவுடி கும்பல் தான் தாக்குதல் நடத்தியது என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது. காயமடைந்த விற்பனை மேலாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News