டெல்லி காற்று மாசு - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை

Last Updated : Nov 7, 2016, 02:10 PM IST
டெல்லி காற்று மாசு - உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை  title=

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதைக் கட்டுப்படுத்தக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது. டெல்லியில் காற்று மாசு மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த கோரி உச்சநீதிமன்றத்தில் இன்று பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு, டெல்லி அரசு பிரதிநிதிகள் நாளை விசாரணையின் போது ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News