வடமாநிலங்களில் வாட்டி எடுக்கும் குளிரை சமாளிக்க தெருக்களில் நெருப்பு மூட்டி குளிர்காயும் மக்கள்.....
வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தலைநகரை, கடுமையான குளிரோடு, காற்று மாசுவும் வாட்டியெடுத்து வருகிறது. பொதுவாக, காற்று மாசு உருவானால், அந்த காற்று மாசு அகன்றுபோவதற்கு, வெப்பத்துடன் கூடிய சீதோஷ்ண நிலை தேவைப்படும். ஆனால், தற்போது, குளிர்காலம் என்பதால், காற்றில் கலந்திருக்கும் மாசு கலைந்துபோகாமல், அப்படியே தேக்கமாகி வருகிறது.
இதை தொடர்ந்து, குளிரை சமாளிக்க மக்கள் தெருக்களில் நெருப்பு பற்ற வைத்து குளிர்க்காய்கின்றனர். மேலும், புகை மூட்டத்தின் காரணமாக விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Air Quality Index of Delhi's Lodhi Road area; prominent pollutants PM 2.5 at 226 and PM 10 at 234, both in the "poor" category pic.twitter.com/Rcx64gWkDo
— ANI (@ANI) January 11, 2019
இன்றைய அறிவிப்பின் படி, தில்லி லோதி ரோடு பகுதியின் வான் தரக் குறியீடுடானது அதிகாலை 2 PM நேரப்படி, 226 ஆகவும், இரவு 10 PM நிலவரப்படி 234 ஆகவும் பதுவாகியுள்ளது.
வீதியில் தங்கும் மக்களுக்குக்காக தற்காலிக தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து அதில் தங்கவைத்துள்ளனர்.