J&K: எல்லையில் பெரிய சதித்திட்டம் நடத்த பாகிஸ்தானின் முயற்ச்சி அம்பலம்

பாகிஸ்தான் எல்லையில் ஒரு பெரிய சதித்திட்டத்தை நடத்த முயற்ச்சியில் ஈடுபட்டு வருவது வெளிவந்துள்ளது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 12, 2019, 06:03 PM IST
J&K: எல்லையில் பெரிய சதித்திட்டம் நடத்த பாகிஸ்தானின் முயற்ச்சி அம்பலம் title=

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாகிஸ்தான் எல்லையில் ஒரு பெரிய சதித்திட்டத்தை நடத்த முயற்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் பெரும் சதித்திட்டம் வெளிவந்துள்ளது. பாகிஸ்தான் கனரக பீரங்கிகளை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகில் நிறுத்தியுள்ளதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாகிஸ்தான் முன்கூட்டிய தனது அனைத்து விமான தளங்களிலும் போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை ஒழித்த பின்னர் பாகிஸ்தான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலை தடைசெய்தது, அதுமட்டுமில்லாமல் இந்தியாவுடனான வர்த்தக உறவை முறித்துக் கொண்டது. ஆனால் வர்த்தக உறவை தடை செய்ததன் மூலம் இந்திய விவசாயிகளும் வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டனர். இந்திய அரசாங்கமும் ஏற்றுமதி வரியை 200 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாயை எட்டியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை நீக்கிய பின்னர், பாக்கிஸ்தான் இதுபோன்ற பல முடிவுகளை ஆவேசமாக எடுத்துள்ளது, இதன் காரணமாக அது பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. இந்தியா மீது உள்ள கோபத்தால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்த முடிவுகளை, திரும்பப் பெற முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளதால், அவர் எடுத்த முடிவால், அவர் நாட்டு மக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Trending News