பெண்ணின் புர்காவை நீக்க சொன்ன சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு

உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்ணின் புர்காவை வலுக்கட்டாயமாக நீக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Last Updated : Nov 22, 2017, 03:31 PM IST
பெண்ணின் புர்காவை நீக்க சொன்ன சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு title=

உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்ட பெண்ணின் புர்காவை வலுக்கட்டாயமாக நீக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

உ.பி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலையொட்டி, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், இன்று பாலியாவில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துக் கொள்ள இருந்தார். அவர் கூட்டத்திற்கு வரும் முன்னே, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் போலீசார், கூட்டத்திற்கு வந்திருந்த சாய்ரா என்ற பெண் அணிந்திருந்த புர்காவை நீக்க சொல்லி வலுக்கட்டாயப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. 

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு போலீஸ் உத்தரவிட்டு உள்ளது. 

Trending News