டெல்லியில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து!

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : May 31, 2019, 09:02 AM IST
டெல்லியில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து! title=

டெல்லியில் இன்று நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற போதிலிலும் பாஜக 303 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்க உள்ளது. அதேவேளையில் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எதிர்கட்சிக்கான அந்தஸ்தை பெறுவதிலும் சிக்கல் கண்டுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்ட அமோதி தொகுதியில் அவர் பாஜக-வின் ஸ்மிரித்தி இராணியிடன் தோல்வியடைந்தார். இது காங்கிரஸ் கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் சந்தித்த படுதோல்வி குறித்து ஆலோசிப்பதற்காக டெல்லியில் இன்று எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறுவதாக இருந்த இந்த கூட்டத்தில், ஜூன் 6 -ல் தொடங்க இருப்பதாக கூறப்படும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது பற்றியும் ஆலோசிப்பதாக இருந்தது. 

இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்காததால்,  இன்று மாலை நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Trending News