வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தன்று, நயாகரா நீர்வீழ்ச்சி, இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்தது. இது தவிர, புர்ஜ் கலீஃபா மற்றும் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் ஆகியவையிம் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தன. டொரொன்டோ சிட்டி ஹாலில் இந்தியக் கொடியும் ஏற்றப்பட்டது.
புதுடெல்லி: இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தன்று, கனடாவின் அடையாளமாக திகழும் நயாகரா நீர்வீழ்ச்சி இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களில் மூவர்ணத்தில் ஜொலித்தது.
#WATCH Canada: Niagara Falls illuminated in colours of Indian national flag. #IndiaIndependenceDay
(Video source: Consulate General of India in Toronto, Canada) pic.twitter.com/FIfLYjSLvV
— ANI (@ANI) August 16, 2020
தவிர, டொராண்டோவின் சிட்டி ஹாலில் இந்தியக் கொடியும் ஏற்றப்பட்டது, அதே நேரத்தில் முப்பரிமாண அதாவது 3டியில் டொராண்டோ அடையாளமாக திகழும் இந்த இடம் மூவர்ண் கொடி வண்ணமாக ஜொலித்தது.
மேலும் படிக்க | அடல்பிஹாரி வாஜ்பாய் நினைவு நாளான இன்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் மோடி...!!
"கனடாவும் இந்தியாவும் ஜனநாயகம் மற்றும் பன்மை, கலாச்சாரம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்பட்டு, நீண்ட காலமாக நல்ல உறவைக் கொண்டுள்ளன. கனடாவில் வசிக்கும் இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடா நாட்டின் முன்னேற்றத்தில் பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளனர் - தொடர்ந்து செய்கிறார்கள் ”என்று கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வில் கனடா வாழ் இந்திய சமூகத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கோபுரமும் இந்தியாவின் 74 வது சுதந்திர தினத்தை கொண்டாட இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களால் ஒளியூட்டப்பட்டிருந்தது
மறுபுறம், நியூயார்க்கில், முதன்முறையாக, டைம்ஸ் சதுக்கத்தில் அமெரிக்கக் கொடியுடன், இந்திய தேசிய கொடியும் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ரந்தீர் ஜெய்ஸ்வால் தேசிய கொடியை ஏற்றினார்.
மேலும் படிக்க | சுதந்திர தினம் 2020: மூவர்ண கொடி தொடர்பான அரிய தகவல்கள்
நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் இந்திய தேசியக் கொடியின் வண்ணங்களிலும் ஒளியூட்டப்பட்டது. டிரைவ்-த்ரூ திருவிழா போல, 800 க்கும் மேற்பட்ட கார்கள், வாஷிங்டன் டி.சி.யின் புறநகரில் நடந்த முதல் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பங்கேற்றன.