இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி

கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில்,  தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2021, 04:51 PM IST
இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி title=

பெங்களூரு: கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான ஓமைக்ரான் குறித்த செய்தி மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில்,  தென்னாப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த 66 மற்றும் 46 வயதுடைய இந்த  இருவரின் மாதிரி ஒமிக்ரான் பரிசோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICMR) அனுப்பப்பட்டது. அந்த நபரின் மாதிரி ‘டெல்டா மாறுபாட்டிலிருந்து வேறுபட்டதாக உள்ளது’ என்று கர்நாடக சுகாதார அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் முன்னதாக தெரிவித்தார். 

கொரோனா வைரஸின் ஓமிக்ரான் மாறுபாட்டின் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மாறுபாடு குறைந்தது 23 நாடுகளுக்குப் பரவியிருப்பதாகவும், மற்ற நாடுகளைப் பாதிக்கும் எல்லா சாத்தியக்கூறுகளும் அதிகம் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்த நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:ஒமிக்ரான் 23 நாடுகளில் நுழைந்து விட்டது; WHO வெளியிட்டுள்ள பகீர் தகவல் 

கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ‘ஆபத்தான நிலை’யில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மேலும் நான்கு பயணிகள், வியாழக்கிழமை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, அவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

நள்ளிரவு 12 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த 243 பேரில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லண்டனில் இருந்து வந்த விமானத்தில் 195 பேருடன் பயணித்த மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

ALSO READ: WHO: குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு; சோதனை விகிதங்களே Omicron வேரியண்ட்டுக்கு காரணமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News