கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர்... 7ஆம் நாளில் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

Crime News: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உடலை கல்லறையில் அடக்கம் செய்த பின்னர் ஏழாவது நாள் உயிருடன் வந்த முதியவரால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதன் பின்னணியை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Aug 25, 2023, 08:40 AM IST
  • அவர் திருமணமாகாதவர்.
  • உறவினர்களை விட்டு தனித்து வாழ்ந்து வந்தார்.
  • அவர் பஸ் நிலையத்தில் தான் தங்கி வந்தார்.
கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட முதியவர்... 7ஆம் நாளில் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி! title=

Crime News: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி. 68 வயதான இவர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் திருமணமாகாதவர். கடந்த பல வருடங்களாக உறவினர்களை விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். 

பெரும்பாவூர் பஸ் பேருந்து நிலையத்தில் தான் தங்கி வந்தார், எப்போதாவது அவருடைய உறவினர்கள் வீட்டுக்கு செல்வது வழக்கம், சில திருட்டு வழக்குகள் இவர் மீது உள்ளது, இவர் கைதாகி பலமுறை சிறைக்கு சென்றுள்ளார். 

இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி அங்கமாலி பகுதியில் ஒதுக்குப் புறமான இடத்தில் ஒரு முதியவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது, உடனே விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விபரம் ஆண்டனியின் உறவினர்களுக்கு தெரிய வர,  எர்ணாகுளம் அரசு மருத்துவமனை பிரேதக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த உடலைப் பார்த்த அவர்கள் சில அங்க அடையாளங்களை வைத்து இறந்த ஆண்டனி தான் என்பதை உறுதி செய்தனர்.

இதை எடுத்து உடனே போலீசார் அவர்களிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து உடல் ஆழ்வார் செயின்ட் ஜோசப் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது, அதைத்தொடர்ந்து நேற்று (ஆக. 24) ஏழாவது நாள் பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று வரை இறந்தது ஆண்டனி தான் என்று  அவரது உறவினர்கள் கருதி இருந்த நிலையில், தற்செயலாக ஆண்டனி நேற்றைக்கு ஊருக்கு வந்தார். அவரைப் பார்த்த ஊர் மக்களும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் படிக்க | சந்திரயான்-3: நிலவின் தடம் பதிக்கும் முன்... விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் வீடியோ!

நடந்த விவரத்தை உறவினர்கள் கூறியதை கேட்டு ஆண்டனியும் அதிர்ச்சி அடைந்தார், இது குறித்து அங்கமாலி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்திய போது, இறந்தவர் ஆண்டனி இல்லை என்பதை உறுதி செய்தனர், அடக்கம் செய்த உடல் யாருடையது என்பது குறித்து மேலும் போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.

"அது எங்கள் தவறல்ல. குடும்பத்தினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உடலை அடையாளம் காட்டினர். அதன் பின்னரே உடலை அவர்களிடம் ஒப்படைத்தோம்" என்று ஒரு அதிகாரி கூறினார். டிஎன்ஏ விவரக்குறிப்பைப் பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளது மற்றும் இறந்தவரை அடையாளம் காண மாநில குற்றப் பதிவுப் பணியகத்தை (SCRB) அணுகியுள்ளது.

"இறந்த நபரின் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய காகிதத்தை மீட்டோம். அதில், 'ஜனார்த்தனன்' என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது. அது அவருடைய பெயராக இருக்கலாம். 'ஜனார்த்தனன்' என்ற பெயரில் காணாமல் போன வழக்குகளைக் கண்டறிய நாங்கள் SCRB-யை அணுகியுள்ளோம்" என்று அந்த அதிகாரி கூறினார். இறந்தவர் என நம்பப்பட்டவர் உயிருடன் வந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News