Reason For Odisha Train Accident: நேற்று மாலை ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று மாலை 6.50 மணி முதல் இரவு 7.10 மணிக்குள் ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்களுக்கு இடையே இந்த விபத்து நடந்துள்ளது.
கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் என்ற பயணிகள் ரயில், நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் மோதியதால் தடம் புரண்டது. தொடர்ந்து, மற்றொரு ரயிலான யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட், கோரமண்டல் ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது.
17 பேட்டிகள் சேதம்!
இதன் பாதிப்பு மிகவும் கடினமாக இருந்ததால், ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் சரிந்து மோசமாக விபத்துக்குள்ளானது. ரயில் பெட்டிகள் முன்பு காற்றில் பறந்து கீழே விழுந்துள்ளது. ஒரு பெட்டி மற்றொரு ரயிலின் கூரையின் மீது ஏறியுள்ளது. இரண்டு ரயில்களின் 17 பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன.
மேலும் படிக்க | Train Accidents: ஒடிசா சம்பவத்தை போல் இந்தியாவை உலுக்கிய ரயில் விபத்துகள்!
விசாரணை தொடக்கம்
விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதா ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். முன்னதாக, இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. ஆனால் ஒரே இடத்தில் மூன்று ரயில்கள் மற்றும் இரண்டு மோதல்கள் இருந்தன என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது.
சிக்னல் கோளாறா?
விபத்தைச் சுற்றியுள்ள பல கேள்விகள் வட்டமிடுகின்றன. குறிப்பாக, சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த தண்டவாளத்தில், கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் எப்படி சென்றது? இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது மனிதப் பிழையா? என கேள்வியெழுகிறது. பலர் சிக்னல் கோளாறாக தான் இருக்கும் என கூறுகின்றனர்.
கவாச் சிக்னல் கிடைக்கவில்லை
நாடு முழுவதும், ரயில் மோதல் தடுப்பு அமைப்பை "கவாச்" (Kavach) நிறுவும் பணியில் ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. ரயில் ஒரு சிக்னலைத் மீறிச்செல்லும் கவாச் எச்சரிக்கை செய்கிறது (ஆபத்தில் அனுப்பப்பட்ட சிக்னல் -- SPAD). இது ரயில் மோதலுக்கு முக்கிய காரணமாகும். இந்த அமைப்பு ரயில் ஓட்டுநரை எச்சரித்து, பிரேக்கைக் கட்டுப்படுத்தி, அதே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் இருப்பதை தெரிவிக்கும். விபத்துக்குள்ளான பாதையில் கவாச் சிக்னல் கிடைக்கவில்லை என்று ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா தெரிவித்தார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாகும். அவை வழக்கமாக விடுமுறை நாட்களில் நிரம்பியிருக்கும். முன்பதிவு செய்யாத பயணிகள் கூட அந்த பெட்டிகளில் பயணிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ