மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: NPS விதிகளில் மாற்றம், சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்: முதல்வர் அறிவிப்பு

Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2024, 02:09 PM IST
  • மத்திய அரசாங்கத்தின் தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை செய்ய மகாராஷ்டிரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • இந்த ஊழியர்களுக்கு இனி கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும்.
  • இதில் அகவிலைப்படியும் சேர்க்கப்படும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: NPS விதிகளில் மாற்றம், சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும்: முதல்வர் அறிவிப்பு title=

Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களும் (Central Government Employees) பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல்கள் (Lok Sabha Election) நடக்க உள்ளன. இந்த தருணத்தில் வாக்காளர்களை மகிழ்விக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நவம்பர் 2005 அல்லது அதற்குப் பிறகு ஓய்வுபெற்ற மாநில அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசாங்கத்தின் (Central Government) தேசிய ஓய்வூதிய அமைப்பில் மாற்றங்களை செய்ய மகாராஷ்டிரா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த ஊழியர்களுக்கு இனி கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். இதில் அகவிலைப்படியும் சேர்க்கப்படும். இதைத்தவிர ஆசிரியர்கள் மற்றும் காவல்துறைக்கான பணியிடங்களிலும் மராத்தா இட ஒதுக்கீடு (Maratha Reservation) அமல்படுத்தப்படும். அரசாங்கத்தின் இந்த முடிவுகள் மாநில அரசு ஊழியர்களுக்கு (State Government Employees) மிகப்பெரிய நல்ல செய்தியாக வந்துள்ளன.

மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார். மேலும் இதில் 60% குடும்ப ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக வழங்கப்படும். மகாராஷ்டிராவில் தேசிய ஓய்வூதி அமைப்பு (National Pension System) 2015 ஏப்ரல் 1 முதல் அமலில் உள்ளது.

மேலும் படிக்க | வங்கி ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: வாரத்தில் 5 நாள் வேலை, ஊதிய உயர்வு!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தமாக 13.45 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் 8.27 லட்சம் பேர் NPS -இன் கீழ் வருகிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய அமைப்பை ஒப்பிட்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க மாநில அரசாங்கம் மார்ச் 2023 -இல் ஒரு குழுவை அமைத்தது. 2005 நவம்பர் 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பணிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு நிரந்தர பொருளாதார நிவாரணத்திற்கான வழிகளைப் பற்றி இந்த குழு ஆய்வு செய்தது. இதற்கான பரிந்துரைகளையும் இந்த குழு வழங்கியுள்ளது.

புதிய ஓய்வூதிய அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை பற்றி கூறிய முதல்வர் ஏக்நாத் ஷீண்டே, மராத்தா இட ஒதுக்கீடு பற்றியும் தெரிவித்தார். அரசு ஆசிரியர் பணிகள் மற்றும் காவல் துறை பணிகளுக்கான நியமனத்தில் 10% மராத்தா இட ஒதுக்கிட (Maratha Quaota) அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கூறினார். மேலும் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், 17,000 காவலர்களை பணியமர்த்துவதற்கான விளம்பரம் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் தெரிவித்தார். இந்த நியமனத்தின் போது மராத்தா இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் படிக்க | Spl Sessions: இன்று பங்குச்சந்தையில் முக்கியமான நாள்! NSE மற்றும் BSE சிறப்பு நேரடி வர்த்தக அமர்வுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News