2024-க்கு முன்னாடி Covid-19 தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்ல ராஜா: ஆதார் பூனவல்லா!!

இரண்டு கட்டங்களில் எடுத்துக்கொண்டால் உலகிற்கு 15 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று பூனவல்லா மதிப்பிடுகிறார்!! 

Last Updated : Sep 15, 2020, 12:43 PM IST
2024-க்கு முன்னாடி Covid-19 தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்ல ராஜா: ஆதார் பூனவல்லா!! title=

இரண்டு கட்டங்களில் எடுத்துக்கொண்டால் உலகிற்கு 15 பில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று பூனவல்லா மதிப்பிடுகிறார்!! 

தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பூசிsயை உருவாக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பாடு வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க முகமூடி அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல், அடிக்கடி சோப்பிட்டு கைகளை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளை நாம் கையாண்டு வருகிறோம். இந்நிலையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (Serum Institute of India) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா (Adar Poonawalla), உலகம் முழுவதும் போதுமான கோவிட் -19 தடுப்பூசிகளை (Covid-19 vaccine) தயாரிக்க குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் ஆகும் என்று எச்சரித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில்., இந்த கிரகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்றார். மேலும், ஒட்டுமொத்த உலகிற்கும் சேர்த்து 15 பில்லியன் டோஸ் தேவைப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்ற தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது என்று பூனவல்லா கூறினார். 

ALSO READ | செப்டம்பர் 25 முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு - மத்திய அரசு விளக்கம்!!

உலகம் அதில் நம்பிக்கையுடன் இருக்க விரும்புகிறது என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்த நிலைக்கு அருகில் கூட யாரும் வருவதை நான் கேள்விப்பட்டதில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். அவரது குடும்பத்தால் நடத்தப்படும் சீரம் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 1 பில்லியன் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. 

மேலும், அதில் 50 சதவீதம் இந்தியாவுக்கு வழங்க உறுதியளித்துள்ளது. போலியோ, தட்டம்மை மற்றும் காய்ச்சல் போன்ற பல தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க 170-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த ஆண்டுதோறும் 1.5 பில்லியன் அளவிலான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராகும்.

அஸ்ட்ராஜெனெகாவுடனான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 68 நாடுகளுக்கு சுமார் 3 டாலர் செலவாகும் தடுப்பூசி அளவுகளையும் 92 நாடுகளுக்கு நோவாவாக்ஸுடனான ஒப்பந்தத்தின் கீழ் உற்பத்தி செய்வதையும் நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ZEE ஹிந்துஸ்தான் மொபைல் செயலியை பதிவிறக்க: 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News