அயோத்தியில், நாளை (ஜனவரி 22) ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து, இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தென்னிந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் உள்ளிட்ட பலர் பங்கு பெற உள்ளனர். இந்த விழாவில் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவும் பங்கு பெற உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா:
உத்தர பிரதேசத்தில் உள்ள சரயு நதிக்கு அருகில் அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் திறப்பு விழா, நாளை நடக்க இருக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கோயிலின் திறப்பு விழா, பல மாநிலங்களின் முக்கிய இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இக்கோயில், பொது மக்களின் தரிசனத்திற்காக ஜனவரி 24ஆம் தேதியிலிருந்து திறக்கப்பட இருக்கிறது.
மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...
அயோத்தி கோயில் திறப்பு விழாவிற்கு செல்லும் நித்தியானந்தா..
இந்துக்களுக்காக கைலாசா எனும் நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறும் நித்தியானந்தா, பல வருடங்களாக தலைமறைவாகி இருக்கிறார். இவர் மீது, பல குற்றவியல் வழக்குகளுக்கு ஆளான இவர், எங்கு இருக்கிறார் என்பது பலருக்கு மர்மமானதாகவே உள்ளது. இந்த நிலையில், அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.
2 More Days Until the Inauguration of Ayodhya Ram Mandir!
Don't miss this historic and extraordinary event! Lord Rama will be formally invoked in the temple's main deity during the traditional Prana Pratishtha and will be landing to grace the entire world!
Having been formally… pic.twitter.com/m4ZhdcgLcm
— KAILASA's SPH NITHYANANDA (@SriNithyananda) January 20, 2024
நித்தியானந்தா வெளியிட்டுள்ள பதிவில், இந்த வரலாற்று மற்றும் அசாதாரண நிகழ்வை காண தவறவிடாதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும், அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவதாகவும், இது, உலகம் முழுவதையும் அலங்கரிக்கும் நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், தனக்கு அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இந்த நிகழ்வில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா தலைமறைவாக இருக்க காரணம் என்ன?
திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, கர்நாடகாவில் முதலில் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அங்கு, அவருக்கு சீடர்களாக இருந்த பெண்கள், இவரை பாலியல் ரீதியாக துன்புருத்தியதாக பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அது மட்டுமன்றி, இவர் பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக உள்ள காட்சிகளும் வெளியானது. இதையடுத்து, நித்தியானந்தாவிற்கு நெருக்கமாக இருந்த ஒருவர் கொடுத்த புகாரின்படி இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் சிக்கி, ஜாமினில் வெளிவந்த நித்தியானந்தா, கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றார்.சில நாட்கள் கழித்து இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறி, அந்த நாட்டை அமெரிக்கா மற்றும் ஐநா சபை அங்கீகரித்து விட்டதாக கூறி வருகிறார். ராமர் கோயில் விழாவில் நித்தியானந்தா கலந்து கொள்ளும் அதே சமயத்தில், அவரது கைலாசா நாட்டின் யூடியூப் பக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள் லைவாக காண்பிக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க | அயோத்தியில் உச்சக்கட்ட பாதுகாப்பு - ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ