உ.பி. சோகம்! ஆஸ்பத்திரியில் குழந்தையை கொன்ற நாய்!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த நாய் பிறந்து குழந்தையை கடித்து கொன்றள்ளது.

Last Updated : Jan 14, 2020, 06:21 PM IST
உ.பி. சோகம்! ஆஸ்பத்திரியில் குழந்தையை கொன்ற நாய்! title=

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆஸ்பத்திரியில் ஆபரேஷன் தியேட்டருக்குள் புகுந்த நாய் பிறந்து குழந்தையை கடித்து கொன்றள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி கஞ்சன்.
பிரசவத்துக்காக நேற்று அப்பகுதியில் உள்ள ஆகாஷ் கங்கா என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை நடத்தது. அவருக்கு நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து குழந்தை பிறந்தது.
 
பின்னர் கஞ்சனை வெளியில் அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்துள்ளனர். குழந்தை அறுவை சிகிச்சை அரங்கில் இருந்தது. திடீரென ஆஸ்பத்திரி ஊழியர் ஒருவர் ஓடி வந்து ஒரு தெரு நாய் அறுவை சிகிச்சை அரங்கினுள் புகுந்து விட்டதாக சத்தம் போட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் உள்ளே ஓடிச்சென்று பார்த்த போது குழந்தை நாய்க்கடி காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தது. குழந்தையை டாக்டர்கள் சோதித்தபோது குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ரவிக்குமார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ஆஸ்பத்திரி உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து டாக்டர்கள் குழு அமைத்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News