வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.ஆந்திர மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளுளில் மஞ்சள் நிற சூறாவளி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்படுகிறது. வடமேற்கு திசையை நோக்கி நகரும் புயல் ஒடிசா - ஆந்திரா இடையே நாளை கரையை கடக்கிறது. தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இடையே கலிங்கப்பட்டினத்தில் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Depression intnsfd into a Deep Depression over North & adj central BoB, likely to intnsify into a CS next 12 hrs & to cross south Odisha north AP coasts around Kalingapatnam by eve of 26Sept.
Cyclone Alert for north AP & adj south Odisha coasts Yellow Message #imd #cyclone pic.twitter.com/9Zru7Ybpm0— India Meteorological Department (@Indiametdept) September 25, 2021
இந்தியாவை தாக்கும் புயலுக்கு ஏன் பாகிஸ்தான் பரிந்துரைக்கும் பெயர் வைக்க வேண்டும் என்று சந்தேகம் எழுகிறதா? இது புயலுக்கு பெயர் வைக்க சர்வதேச அளவில் மேற்கொண்டுள்ள ஒப்பதத்தின்படி தற்போதைய புயலுக்கு குலாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு கடல் பகுதி ரீதியாக புயலின் பெயர் ஏற்கனவே முடிவு செய்யப்படும். பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் கடல் என வெவ்வேறு கடல் பகுதிக்கு ஏற்ப தனித்தனி பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 7 தட்பவெப்ப மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதில், வட இந்திய பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா, வங்கதேசம், ஈரான், மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் என 13 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு நாடும் தயார் செய்து பரிந்துரைத்துள்ள பெயர்களில் இருந்து புதிதாக உருவாகும் புயலுக்கு பெயர் வைக்கப்படுகிறது. ஒருமுறை வைத்த பெயரை மீண்டும் வைக்கக் கூடாது என்பதால், அகர வரிசைப்படி பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
Read Also | தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR