மே 7-ம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்விற்கு ஹால்டிக்கெட் சிபிஎஸ்இ (www.cbseneet.nic.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு மே 7-ம் தேதி நடக்க உள்ளது.
தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதற்கான முடிவு ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் (www.cbseneet.nic.in) என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட வில்லை. எனவே தமிழகத்தில் உள்ள மாணவ மாணவியர்களும் நீட் தேர்வு எழுத வேண்டியக் கட்டாயத்தில் உள்ளனர்.