2 மணி நேரத்திற்குள் 2 தனித்தனியான சம்பவங்களில் 19 வயது பெண் 3 ஆண்களால் பலாத்காரம்.

இரண்டு மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் 19 வயது பெண் மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2020, 10:46 AM IST
2 மணி நேரத்திற்குள் 2 தனித்தனியான சம்பவங்களில் 19 வயது பெண் 3 ஆண்களால் பலாத்காரம். title=

மும்பை: மகாராஷ்டிராவின் நவி மும்பையில் பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு இரண்டு மணி நேரத்திற்குள் இரண்டு தனித்தனியான சம்பவங்களில் 19 வயது பெண் மூன்று ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஆட்டோரிக்ஷா டிரைவர் உட்பட குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுக்குறித்து பேசிய ரபாலே எம்ஐடிசி காவல் நிலைய அதிகாரி ஒருவர், பிப்ரவரி 18 ம் தேதி அந்த பெண் ரயிலை தவற விட்டதால், பின்னர் அந்த பெண் மற்றொரு ரயிலில் ஏறி பிப்ரவரி 18 இரவு தானே மாவட்டத்தில் உள்ள மும்ப்ரா ரயில் நிலையத்தை அடைந்து, அங்கேயே தூங்கி உள்ளார். 

அடுத்த நாள் பிப்ரவரி 19 அன்று, அவர் மற்றொரு ரயிலில் ஏறி திவா ஸ்டேஷனை அடைந்துள்ளார். அவரிடம் பணம் இல்லாததால், அங்கு இருந்த ஒரு பெண் பிச்சைக்காரரிடம், தனது தங்க மூக்குத்தியை பணத்திற்கு விற்று தருமாறு உதவி கேட்டுள்ளார். பல இடங்களில் முயற்சி செய்தும், அவர்களால் இரவு வரை மோதிரத்தை விற்க முடியவில்லை என்று போலீசார் அவர் கூறினார். 

இதனையடுத்து, அந்த பெண் திவா ரயில் நிலையத்துக்கே செல்லலாம் என்று சாலையில் நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கெ வந்த ஆட்டோ டிரைவரை அருகில் உள்ள ரயில் நிலையத்தில் இறக்கிவிடச் சொன்னாள்.

அவரை ஏற்றிகொண்ட ஆட்டோ டிரைவர் நவி மும்பையில் பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று அந்த அதிகாரி கூறினார். பின்னர் ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணை அப்பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே இறக்கி விட்டு சென்றுவிட்டார்.

அதன் பிறகு, ஸ்கூட்டரில் அங்கு வந்த இரண்டு ஆண்களிடம் ரயில் நிலையத்திற்கு எப்படி செல்வது.. எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுள்ளார். இருவரும் அவளை இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்து, கன்சோலி அருகே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்று அதிகாரி கூறினார். 

பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். மூவரும் பிப்ரவரி 29 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

Trending News