'நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் அளித்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளை, சோனியா, ராகுல் இயக்குனர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனம் விலைக்கு வாங்கியது; இவற்றில் முறைகேடு நடந்துள்ளது என பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை கேட்டு சுப்ரமணியன் சாமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த கோர்ட், வழக்கு தொடர்பான ஆவணங்களை தர உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சோனியா, ராகுல் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், வழக்கு தொடர்பான ஆவணங்களை சுப்ரமணியன் சாமிக்கு தரவேண்டிய அவசியமில்லை எனக்கூறியுள்ளது.