நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக முஸ்லீம் நபர் தனது திருமண அட்டையில் இந்து கடவுளை அச்சிட்டுள்ளார்!!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகலாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், ல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக முஸ்லீம் நபர் தனது திருமண அட்டையில் இந்து கடவுளை அச்சிட்டுள்ளார் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
விநாயகர் மற்றும் ராதா-கிருஷ்ணரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால் மீரட்டில் ஒரு முஸ்லீம் திருமணத்திற்கான அழைப்பிதழ் நகரத்தின் பேசும் பொருளாக மாறியுள்ளதுடன், அதனுடன் ‘சந்த் முபாரக்’ என்றும் கூறுகிறது. இந்த தனித்துவமான அழைப்பிதழ் அட்டையை மார்ச் 4 ஆம் தேதி அவரது மகள் அஸ்மா கட்டூனின் திருமணத்திற்காக ஹஸ்தினாபூர் பகுதியில் மொஹமட் சரபாத் அச்சிட்டார்.
இது குறித்து மொஹமட் சரபாத் கூறுகையில்; "இந்து-முஸ்லீம் நட்பை வெளிப்படுத்துவது நல்ல யோசனையாக இருக்கும் என்று நான் நினைத்தேன், குறிப்பாக வகுப்புவாத வெறுப்பு நிலவும் போது. எனது நண்பர்கள் இந்த முயற்சிக்கு மிகவும் சாதகமாக பதிலளித்துள்ளனர், ”என தெரிவித்தார். இருப்பினும், அவரது உறவினர்கள் மற்றும் முஸ்லீம் நண்பர்களுக்காக, அவர் மற்றொரு திருமண அட்டையை உருது மொழியில் அச்சிட்டுள்ளார். "எனது உறவினர்கள் பலருக்கு இந்தி படிக்க முடியாது, அவர்களுக்காக நான் உருது மொழியிலும் அட்டைகளை அச்சிட்டுள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார்.