உலகில் அதிக நேரம் உழைக்கும் மும்பைவாசிகள்!

உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக சுவிசர்லாந்து வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Last Updated : Jun 4, 2018, 09:37 AM IST
உலகில் அதிக நேரம் உழைக்கும் மும்பைவாசிகள்! title=

உலகில் அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிக நேரம் உழைப்பதாக சுவிசர்லாந்து வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

சுவிசர்லாந்து வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 

ஒரு ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகபட்சமாக 3,314.7 மணி நேரம் வேலை பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வரிசையில் டெல்லி 4வது இடத்தை பிடித்துள்ளது. ஹனோய் இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ சிட்டி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மும்பையை தொழிலாளர்கள் எவ்வளவு உழைத்தாலும் அவர்களது வாழ்க்கைத் தரம் உயரவில்லை எனவும்,  நியூயார்க் நகரில் 54 மணி நேரம் வேலை பார்த்து கிடைக்கிற சம்பளத்தை வைத்து ஒரு ஐபோன் X வாங்கிவிடலாம். ஆனால், மும்பையில் வேலை பார்ப்பவர்கள் ஐபோன் X மொபைலை வாங்க 917 மணி நேரம் உழைக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

Trending News