ஆசிய-இந்திய உச்சி மாநாடு: மோடி சந்திப்பு!!

டெல்லியில் நடைபெற்ற ஆசிய-இந்திய உச்சிமாநாட்டில் மோடி மற்றும் பிற நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.    

Last Updated : Jan 25, 2018, 12:18 PM IST
ஆசிய-இந்திய உச்சி மாநாடு: மோடி சந்திப்பு!! title=

டெல்லியில் நடைபெற்ற ஆசிய-இந்திய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிற நாட்டு அதிபர்களை மோடி வரவேற்றார்.

ஆசிய-இந்திய உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கியது.  இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆசியா மற்றும்-இந்திய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடியை சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லோங் சந்தித்துப் பேசிய பின்னர் இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்றார்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர விசயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதாக தெரிகிறது. எனினும், அவர்களது ஆலோசனை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

இதேபோல், ஆசிய-இந்திய உச்சிமாநாட்டிற்கு வருகை புரிந்த மியான்மர் மாநில ஆளுநர், ஆங் சான் சூ கியை மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார் என்பது குறிபிடத்தக்கது. 

Trending News