ராஞ்சி: இன்று ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி, ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். அப்பொழுது அவருடன் ஜார்க்கண்ட் ஆளுநர் திராவ்படி முர்மு, முதலமைச்சர் ரகுவர் தாஸ் (Raghubar Das) மற்றும் பல அமைசர்க்ளும் கலந்து கொண்டனர்.
ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியது:-
இன்று, ஜார்கண்டில் மாநிலத்தில் ஜனநாயகத்தின் கோயில் (புதிய சட்டசபை) திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் ஒரு கட்டிடம் மட்டுமல்ல, ஜார்க்கண்ட் மக்களின் பொன்னான எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் ஒரு புனித இடமாகும்.
பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா மூலம் ஏழைகளுக்காக 2 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இப்போது மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மேலும் கூறுகையில், 'நாங்கள் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்ய யோஜனாவை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்தோம். அந்த திட்டத்தை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இங்கே தொடங்கினோம். இந்த திட்டத்தின் கீழ், சுமார் 44 லட்சம் ஏழை நோயாளிகளுக்கு இதுவரை சிகிச்சையின் பயன் கிடைத்துள்ளது, அதில் சுமார் 3 லட்சம் பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
மேலும் பிரதமர் மோடி கூறுகையில், "22 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜீவன் ஜோதி யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனாவுடன் இணைந்துள்ளனர். அவர்களில் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் ஜார்க்கண்டை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு மார்ச் முதல், நாட்டின் கோடிக்கணக்கான அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடந்து வருகிறது என்றும், அதில் இதுவரை, 32 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் "ஸ்ராமயோகி மனதன் யோஜனா"வில் சேர்ந்துள்ளனர்.
அக்டோபர் 2 காந்தி ஜியின் 150வது பிறந்த நாள். இந்த நாளில் நாம் பிளாஸ்டிக் குவியலை அகற்ற வேண்டும். நேற்று முதல், ஸ்வச்சதா ஹாய் சேவா பிரச்சாரம் நாட்டில் தொடங்கியது எனக் கூறினார்,.
நமது நாட்டின் சட்டத்திற்கு மேலாகவும், நீதிமன்றங்களுக்கு மேலாகவும் உயர்ந்தவர்களாக கருதியவர்கள், இன்று அவர்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் கோருகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் இந்த தாக்குதல் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் மீது இருந்தது.
'மத்தியில் 2வது முறையாகக அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் நான் பார்வையிட வாய்ப்பு கிடைத்த மாநிலங்களில் ஜார்கண்ட் ஒன்றாகும். இந்த பிரபாத் தாரா மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களுடன் யோகா செய்தேன். ஆயுஷ்மான் பாரத் யோஜனா இந்த மைதானத்திலிருந்து தொடங்கப்பட்டது. ஏழை மற்றும் பழங்குடியினர் திட்டங்களைத் தொடங்கும் மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது என்று அவர் கூறினார்.