அடுத்த வருடம் மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்கலாம். 50 சதவீதம் வரி மட்டுமே விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்க காலக்கெடுவை மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதித்யா தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை கருப்பு பணத்தை தானாக முன் வந்து தெரிவிக்கலாம். கணக்கில் காட்டப்படாத பணத்திற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை தானாக முன் வந்து அளிப்பவரின் ரகசியம் காக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
People can directly contact the dept with info about possible conversion of black money at email address:
blackmoneyinfo@incometax.gov.in— Ministry of Finance (@FinMinIndia) December 16, 2016
Unaccounted cash can be disclosed under PMGKY that comes with 50 per cent tax and penalty starting from tomorrow till 31st March, '17: Adhia pic.twitter.com/USxGpU5gWa
— ANI (@ANI_news) December 16, 2016