பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வருடத்திற்கு ரூ. 8 இலட்சத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்கள் மற்றும் ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள், இந்த இட ஒதுக்கீடு தகுதியானவர்கள் ஆவார்கள். தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மேலாக இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பொருளாதாரரீதியில் பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு இதுவரை இந்தியாவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதில்லை. அதற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழி இல்லை. ஆனால் அதனை மீறி, இன்று இந்த மாசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு பலர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மசோதாவை மத்திய அமைச்சர் தவர் சந்த் கெலாட் இன்று தாக்கல் செய்தார்.
Union Minister Thawar Chand Gehlot has tabled bill for 10 percent reservation for economically weaker upper caste sections in Lok Sabha.
— ANI (@ANI) January 8, 2019