முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார்!

பெல்லாரி சுரங்கத் தொழில் மன்னன் ஜனார்த்தன ரெட்டி குற்றவியல் கிளை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்!

Last Updated : Nov 11, 2018, 04:54 PM IST
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார்! title=

16:53 11-11-2018

அம்பிடெண்ட் குழும ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, வரும் நவம்பர் 24-ஆம் நாள் வரை நீதிமன்ற காவலில் அனுப்பபட்டுள்ளார்!


பெல்லாரி சுரங்கத் தொழில் மன்னன் ஜனார்த்தன ரெட்டி குற்றவியல் கிளை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்!

கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்த்தன் ரெட்டி சுரங்கத் தொழில், இரும்புத்தாது ஏற்றுமதி என பல்வேறு தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றார். கர்நாடகாவில் முன்பு பாஜக ஆட்சியில் இருந்தபோது, சுரங்கங்கள் ஒதுக்கிய விவகாரத்தில் 2015-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் ஜனார்த்தன் ரெட்டி அமைச்சராக இருந்த போது நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் ஷையது அகமத் ஃபரீத் என்பவரிடம், அமலாக்கத்துறையில் பதிவான வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க ரூ.18 கோடி ஜனார்த்தன ரெட்டி லஞ்மாக கோரியதாகவும், பின்னர் ரூ.18 கோடி பேரம் 57 கிலோ தங்க கட்டிகளில் முடிந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து ஜனார்த்தனரெட்டி தலைமறைவாகி உள்ளார். பின்னர் அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் தற்போது ஜனார்த்தன ரெட்டியினை குற்றவியல் கிளை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News