வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனியாக களமிறங்கும் சிவசேனா கட்சி!

சிவசேனா கட்சியினர் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனியாக களமிறங்க தயாராகிறது!!

Last Updated : Sep 16, 2019, 09:30 AM IST
வரும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனியாக களமிறங்கும் சிவசேனா கட்சி! title=

சிவசேனா கட்சியினர் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தனியாக களமிறங்க தயாராகிறது!!

சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே, பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருக்குமாறு தனது கட்சிக்காரர்களைக் கேட்டுக் கொண்டதாகக் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அவர் சட்டமன்றத் தேர்தலில் தனியாகச் செல்லவும் விரும்பவில்லை. சிவசேனாவும் பாஜகவும் வாக்கெடுப்புக்கு முன்னர் இருக்கை பகிர்வு ஏற்பாட்டு குறித்து கலந்துரையாடுவார்கள் என நம்பப்படுகிறது. சிவசேனா தலைவர் ஞாயிற்றுக்கிழமை தனது இல்லமான மாடோஷ்ரியில் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தன.

சிவசேனா தலைவர் பாஜக மீது அதிருப்தி அடைந்துள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் ஜீ மீடியாவிடம் தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டமன்ற இடங்கள் உள்ளது. அதில், சிவசேனா 120 இடங்களுக்கு மேல் போட்டியிட விரும்புகிறது. வாக்கெடுப்புக்கு முந்தைய கூட்டணியை இறுதி செய்வதற்காக குறைந்தது 120 இடங்களை வழங்குமாறு கட்சி பாஜகவிடம் கேட்டுள்ளது. 106-க்கும் மேற்பட்ட இடங்களை வழங்குவதற்கான மனநிலையில் பாஜக இல்லாததால், இடங்களைப் பகிர்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு வரும் என்று தெரிகிறது.

முன்னதாக சிவசேனா 144 இடங்களுக்கு போட்டியிடுவதில் பிடிவாதமாக இருந்தது. ஆனால், சேனாவுக்கு இவ்வளவு இடங்களை ஒதுக்க பாஜக தயக்கம் காட்டியதால் கட்சி தனது கோரிக்கையை 120 இடங்களாக குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, உத்தவ் தாக்கரே பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருடன் மேடையை பகிர்ந்து கொண்டார். மேலும் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக மற்றும் அவரது கட்சியின் கூட்டணி "தவிர்க்க முடியாதது" என்று அறிவித்தாது குறிப்பிடத்தக்கது.  

 

Trending News