டெல்லி எம்.சி.டி. தேர்தல்: அர்விந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த அண்ணா ஹசாரே

Last Updated : Apr 26, 2017, 04:18 PM IST
டெல்லி எம்.சி.டி. தேர்தல்: அர்விந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த அண்ணா ஹசாரே title=

அர்விந்த் கெஜ்ரிவாலை அண்ணா ஹசாரே விமர்சித்துள்ளார்

டெல்லியில் மூன்று மாநகராட்சிக்கு கடந்த 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்த 272 வார்டுகளில் 270 வார்டுகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 வார்டுகளில் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டது. இந்த தேர்தலில் 54 சதவீத வாக்குகள் பதிவாகின.

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் பா.ஜனதா வாக்கு 183 இடங்களில் முன்னிலை பெற்று முதலிடம் பிடித்து உள்ளது. ஆம் ஆத்மி 48 இடங்களிலும், காங்கிரஸ் 27 இடங்களிலும் முன்னிலை பெற்று உள்ளது. 

ஆம் ஆத்மி கட்சியின் தோல்வி குறித்து சமூல ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது:

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்தது கவலை அளிக்கிறது. முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் உறுபினர்கள் செய்த ஊழலே தோல்விக்கு காரணம். டெல்லி சட்டமன்ற தேர்தலின் போது கெஜ்ரிவால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அவர் கூறினார்.

Trending News