இந்திரா காந்தி தோற்றது போல் பிரதமர் மோடியும் தோற்பார் -மாயாவதி!

1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி தோற்றது போல் வாரணாசியில் பிரதமர் மோடி தோற்பார் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 19, 2019, 03:24 PM IST
இந்திரா காந்தி தோற்றது போல் பிரதமர் மோடியும் தோற்பார் -மாயாவதி! title=

1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் இந்திராகாந்தி தோற்றது போல் வாரணாசியில் பிரதமர் மோடி தோற்பார் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்!

1977-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டு, பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல தற்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., 

உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியில் எந்த ஒரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்வராக யோகி ஆதித்ய நாத்தும், பிரதமராக நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.

பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ஆம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது தற்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?

குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Trending News