“பாஜகவை அகற்றுங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்” என்ற கோசத்துடன் பேரணி - மம்தா அறிவிப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (சனிக்கிழமை) திரிணமுல் காங்கிரஸ் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் 42 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2018, 04:55 PM IST
“பாஜகவை அகற்றுங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்” என்ற கோசத்துடன் பேரணி - மம்தா அறிவிப்பு title=

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (சனிக்கிழமை) திரிணமுல் காங்கிரஸ் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில் 42 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளார். 

மேற்கு வாங்க மாநில தர்மதுல்லா பகுதியில் திரிணமூல் இளைஞர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த வருடாந்திர தியாகிகள் நாள் பேரணி நடைபெற்றது. திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மேடையில் பங்கேற்றனர். மோசமான வானிலை நிலவிய போதிலும் பேரணியில் கூட்டம் நிறைந்திருந்தது. இதில் கலந்துக்கொண்டார் மேற்கு வாங்க மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி.

பேரணியில் மம்தா பானர்ஜி பேசியது.....

ஆகஸ்ட் 1 முதல் 15 ஆம் தேதி வரை பாஜக-வை அகற்றுங்கள்... நாட்டை காப்பாற்றுங்கள்... என்ற கோசத்துடன் பேரணி நடத்தப்படும் என மம்தா அறிவித்தார். அடுத்த பொதுத் தேர்தலில் பாஜக அதிகார மையம் அழிக்கப்படும் என்றும், அதற்க்கான வழி வங்காளம் காட்டும் எனவும் கூறினார். 

 

 

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு இரட்டை இலக்கு எங்களில் மட்டுமே கிடைக்கும். அதற்கு மேல் அவர்களால் வெல்ல முடியாது. பீகார், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இது பெரும் தோல்வியை சந்திக்க வேண்டி வரும்.

திரிணமுல் காங்கிரஸ் தலைவர் பி.ஜே.பி நாட்டை சூறையாடுகிறார்கள் என்று கூறினார். மேலும் தலிபான் தீவிரவாதத்தை பி.ஜே.பி மற்றும் சில ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அறிமுகப்படுத்துகின்றனர் எனக் கூறினார்.

 

பிரதம மந்திரி நரேந்திர மோடியின் பெயரை குறிப்பிடாமல், அதிகார மையத்தில் அமர்ந்துள்ள சிலர் ஹிட்லர் மற்றும் முசோலினியை விட பெரிய கொடுங்கோலாவார் என்றும், ஹிந்துத்துவத்தின் பெயரில் அரசியலில் ஈடுபடும் பி.ஜே.பி உண்மையில் இந்து மதத்தை அவமதிக்கிறது. பிஜேபி ஊடக துறையிலும், நீதித்துறைக்குள் குறுக்கிடுவதாக குற்றம் சாட்டினார் மம்தா பானர்ஜி.

பிரதமர் மோடியின் பேரணியில் பந்தல் விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, பந்தல் கட்ட தெரியாதவர்கள், நாட்டை கட்டமைக்க போவதாக கூறினார். திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக மக்களை திசை திருப்ப பிஜேபி தலைவர்கள் பணத்தை விநியோகிப்பதாகவும் மம்தா குற்றம் சாட்டினார்.

 

 

Trending News